Tuesday, December 25, 2007

கிராமத்து மார்கழிக் காலைகருக்கலின் போதே
கண் விழித்து

விருட்டென சிலவாளி
நீர் இறைத்து

சுருக்கெனச் சிலிர்க்க
மேனி நனைத்து

சுருட்டித் துண்டை
தலையில் கோர்த்து

உருக்கும் பனியில்
வாசல் தெளித்து

இருவிரல் திரித்து
வண்ணக் கோலமிட்டு

வருடும் காற்றில்
கேசம் பின்தள்ளி

ஒருபிடி சாணம்
கோலத்தின் நடுவில்

செருகும் பூசணிப்
பூவதன் அழகில்

பெருமைமிகு எம்குலப்
பெண்களைக் காண

மார்கழிக் காலை
மயக்கிடும் ஆளை !

15 மறுமொழி(கள்):

சதுக்க பூதம்said...

Nice one.

ஜீவா (Jeeva Venkataraman)said...

நன்றாக இருந்தது சதங்கா!

சதங்கா (Sathanga)said...

சதுக்க பூதம்,

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

பாராட்டுக்கு மிக்க நன்றி

முரளி இராமச்சந்திரன்said...

சதங்கா,

கவிதை மிக அருமை.

ஊரில் எத்தனை வீட்டின் வாசலில் நின்று இப்படி கோலமிடும் பெண்களை பார்த்தீர்களோ?(அட இப்படி ஒரு அருமையான கவிதைக்காகத்தான்!!)

அந்த காட்சியை ஒரு புகைப் படம் போல அருமையாக பதிந்திருக்கின்றீர்கள்.

சிறிய திருத்தம் (நானும் தவறாக இருக்கலாம்) சானமா? சாணமா?

அன்புடன்,

முரளி.

Mangaisaid...

Great ya.

When I was doing my 3rd or 4th we neighbours used to reserve the place and try to draw big big kolams. intha border reservation ellam appo panniya thundu.

ippo oru kolam pottu ezhuntha moonu nal avvalavu than.

then one small correction. it should be

சாணம்

நாகு (Nagu)said...

அருமை சதங்கா. சின்ன வயதில் கோலத்து கலரை ஈரமான டூத் பிரஷ் கொண்டு தேய்த்ததுண்டு(அழியாத கோலங்கள் :-)

கருக்கலில் காலையில் - 'காலையில்' தேவையில்லை.

நம்ம ஊர் விஷயங்களாகட்டும், இந்த ஊர் விஷயங்களாகட்டும். கண்முன் கொண்டு நிறுத்துவதில் உமக்கு நிகர் நீர்தான்.

சதங்கா (Sathanga)said...

முரளி,

//ஊரில் எத்தனை வீட்டின் வாசலில் நின்று இப்படி கோலமிடும் பெண்களை பார்த்தீர்களோ?//

நின்று தான் பார்க்க வேண்டுமா முரளி ? நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள்.

எனது பள்ளி/கல்லூரி நாட்களில், காலை வேளையில் திருப்பள்ளி எழுச்சி தவறாமல் செல்வது (முப்பது நாளைக்கு எப்படியும் 20 நாட்கள்) வழக்கம். அந்தக் காலைக் காட்சியை அப்படியே கவிதையாக்கினேன். அவ்வளவே. நீங்க தப்பா நினைத்துவிட்டீர்களே.... சிவா சிவா ... :)

சாணம் தான் சரி, மாற்றிவிட்டேன்.

சதங்கா (Sathanga)said...

மங்கை,

ஆகா அருமை. உங்கள் flash-back-யும் பகிர்ந்து கொண்டதற்கு.

இப்ப மூனு நாள் அகிறது என்று சொல்றீங்களே. இன்னும் இந்தக் காட்சிகள் இருக்குனு படிக்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு. அது நிலைக்கனும் !!!

சதங்கா (Sathanga)said...

நாகு,

//சின்ன வயதில் கோலத்து கலரை ஈரமான டூத் பிரஷ் கொண்டு தேய்த்ததுண்டு(அழியாத கோலங்கள் :-)//

இது சூப்பர்.

//கருக்கலில் காலையில் - 'காலையில்' தேவையில்லை.//

திருத்தம் செஞ்சாச்சு.

//நம்ம ஊர் விஷயங்களாகட்டும், இந்த ஊர் விஷயங்களாகட்டும். கண்முன் கொண்டு நிறுத்துவதில் உமக்கு நிகர் நீர்தான்.//

சிரம் தாழ்த்தி ... இருங்க இருங்க ... எதும் உள் குத்து இல்லயே ?!

Mangaisaid...

நன்றி.

என் பையன் ஊக்குவிப்பது மாதிரி யாரும் செய்ய முடியாது.
எதிர் வீட்டில் எவ்வளவு அழகாக போட்டிருந்தாலும்
அம்மா, உன் கோலம் மாதிரி இல்லை என்று என்னை போட வைத்து விடுகிறான்.
தை மாசம் குளிரில் பொங்கலுக்கு கோலம் போட்டு விட்டு (விட மாட்டான் பொடியன்) ஒரு வாரம் ஜலத்ோஷம் வந்து அவஸ்தை படுவேன்


அழகான கோலம் ஒரு அருமையான கலை தான்.

Anonymoussaid...

நல்ல கவிதை.

"பூசனி" இல்லை பூசணி.

Nithya Balaji

ஜோதிபாரதிsaid...

தங்கள் கவிதை நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!
மார்கழி பற்றிய எனது கவிதை உங்கள் பார்வைக்கு!!!
http://jothibharathi.blogspot.com/2008/01/blog-post_01.html

அன்புடன்,
ஜோதிபாரதி.

சேதுக்கரசிsaid...

அட.. நம்ம profile படம் மாதிரியே நல்லா இருக்கே :-))

சதங்கா (Sathanga)said...

மங்கை,

மறுவருகைக்கு நன்றி.

//என் பையன் ஊக்குவிப்பது மாதிரி யாரும் செய்ய முடியாது.
எதிர் வீட்டில் எவ்வளவு அழகாக போட்டிருந்தாலும்
அம்மா, உன் கோலம் மாதிரி இல்லை என்று என்னை போட வைத்து விடுகிறான்.//

கொடுத்து வைத்தவர் நீங்கள். வாழ்த்துக்கள்.

*****

நித்யா பாலாஜி,

பிழை திருத்தலுக்கு நன்றி.

*****

ஜோதிபாரதி,

// தங்கள் கவிதை நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!! //

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

//மார்கழி பற்றிய எனது கவிதை உங்கள் பார்வைக்கு!!!//

என்னங்க ஏதோ பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. உங்க கவிதை வாசித்தேன். நன்றாக இருந்த்து. பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்.

*****

சேதுக்கரசி,

// அட.. நம்ம profile படம் மாதிரியே நல்லா இருக்கே :‍))//

வாங்க சேதுக்கரசி. ஆமாங்க அதே மாதிரி நல்லா இருக்கு. எப்படி இப்படி :)) Great minds think alike ... ;))

Post a Comment

Please share your thoughts, if you like this post !