ஹூஸ்டன் பயணம் - 4 - மூடிஸ் கார்டன்
ஜூலை 06, ஞாயிறு.
காலை எழுந்து ஹோட்டலிலேயே ப்ரேக்ஃபஸ்ட் முடிச்சாச்சு. எல்லாம் பேக் பண்ணி, ஒரு முறை எதும் மிஸ்ஸாகி இருக்கா என்று சரி பார்த்து, செக்அவுட் செய்து மூடிஸ் கார்டன் சென்றோம். மணி அப்பொழுதே காலை பதினொன்று ஆகியிருந்தது.
இங்கிருந்து ஊருக்குச் செல்ல பத்து மணி நேரம் ட்ரைவ். நண்பன் முன்னாடியே சொல்லியிருந்தான், ரெய்ன் ஃபாரஸ்ட் மிஸ் பண்ணக் கூடாது என்று. அப்புறம் 'டைட்டானிக்' பற்றி புதுசா காட்சிக் கூடம் ஆரம்பித்திருக்கிறார்கள் அதுவும் பார்க்கணும் என்று. ஊருக்கு ட்ரைவ் பண்ணும் நேரத்தைக் கணக்கிட்டு 'ரெய்ன் ஃபாரஸ்ட்' மட்டும் டிக்கட் வாங்கினோம்.
சிங்கையில் சென்டோசாவா, இல்ல வேறு தனி இடமா என்று சரியே நினைவில் இல்லை. அதே போல் தான் இதுவும். ஆனால் இங்கு வெளித் தோற்றம் பெரிய கண்ணாடி பிரமிட் போன்றது. உள்ளே நிறைய வண்ணங்களில் பூக்கள், பறவைகள், தவளைகள், பாம்புகள், ஒரு மகாப் பெரிய அனகோன்டா கூட.
தவளையைத் தொட்டால் எப்படி இருக்கும், அதன் பாதம் எப்படி இருக்கும் என்றெல்லாம் செயற்கையாய் செய்து வைத்து, நம்மை தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். இப்படித் தான் இருக்கும் என்று. இதை ஏன் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள் என்று ஒரு கேள்வி என்னுள். அப்புறம் தான் தெரிந்தது, இவர்கள் எங்கே நிஜத் தவளை பிடித்திருக்கப் போகிறார்கள் என.
சின்ன வயசில நாம பிடிக்காத தவளையா. அதும் மழைக் காலங்களில், சட்னியில் கொட்டிய தாளித்த கடுகு மாதிரி :), தெருவோரம் ஓடும் நீரில் எவ்வளவு குட்டி குட்டித் தவளைகள் மிதக்கும். சிலவற்றைப் பிடித்து கண்ணாடி டம்ளர்கள், தீப்பெட்டி டப்பாக்கள் என போட்டு வைப்போமே ! அதெல்லாம் மேற்கத்தியர்களுக்கு எட்டாக் கனி தானே.
இதனைக் கடந்து உள்ளே சென்றால், நெடுங் கண்ணாடிக் கூரை. அங்கு ஏகப்பட்ட பறவையினங்கள் சுதந்திரமாக விட்டிருக்கிறார்கள். பல வண்ணங்களில் மக்காவ்கள். இரு பஞ்சவர்ணக் கிளிகள். அணில்கள், வௌவால்கள், ஆமைகள், மீன்கள், பல்லிகள், பல விதமான பறவைகள், மற்றும் பூக்கள்.
ஆங்காங்கே சில இளம் வயதினர் பாம்பையோ, பல்லியையோ வைத்து, அங்கு கூடும் மக்களுக்கு அதனைப் பற்றிய செய்திகள் கூறுகிறார்கள்.
பீச்சுக்கு அப்புறம் குட்டீஸ் விரும்பிய இடம் இந்த 'ரெய்ன் ஃபாரஸ்ட்'
நேரம் இருந்தால் நல்லா ஒரு நாள் செலவழிக்கலாம் இந்த கார்டனில். கார்டனுக்குள்ள நிறைய இருந்தாலும், நாங்க போகணும் என்று முடியாமல் போனது 'டைட்டானிக்', அப்புறம் 'பால்ம் பீச்'. என்ன குழந்தைகள் நல்லா நீரில் விளையாடி இருக்கும்.
ரெண்டு மணி நேரம் சுற்றி விட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு, ஒன்னரை மணிக்கு வண்டியைக் கிளப்பினோம். வழியில் சில ட்ராபிக் ஜாம்கள், சில நிறுத்தங்கள் எல்லாம் தாண்டி வீடு வந்து சேர அதிகாலை இரண்டு மணி.
தூங்கி எழுந்து அலுவலகம் ஓடணுமே என்று நினைக்கும்போது ஒரு பக்கம் கவலையா இருந்தாலும், ஒரு திருப்தியான ட்ரிப் போய்ட்டு வந்ததை நினைத்து நிம்மதியாகத் தூங்கினோம் அன்று.
கீழே படங்களைக் கண்டு ரசியுங்கள்.
-----
ரெய்ன் ஃபாரஸ்ட் பிரமிட்
ஆரஞ்சும் பச்சையும் போட்டி போடும் அழகு
பூவுக்குள் புல்
லேவண்டர் கோதுமை ?!
சொட்டும் நீரழகா, இப் பூ அழகா ?
லேவண்டர் ஆர்க்கிட்
ஆரஞ்சு ஆர்க்கிட்
ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை
ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை
ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை
ப்ளாஸ்டிக் (போன்ற) டோட்
ட்ராகன் லிசார்ட்
ப்லூ டங் (நாக்க படம் எடுக்க எவ்வளவோ முயற்சித்தேன், முடியல :()
நானும் மரத்தில் தொங்குவேனே !
மலை (முழுங்கி) என பருத்து நீண்ட அனகோன்டா
நீரடியில் பஞ்சவர்ணத்தின் ரொமான்ஸ்
இன்னான்றே என்று சண்டையிடும் மக்காவ்
பூவில் தான் ஆரஞ்சு இருக்கணுமா, நாங்களும் தான்.
-----
நண்பர்களே, வலையில் எனது முதல் பயணக் கட்டுரை இது (பள்ளிகளில் எழுதியதன் பின் இப்பொழுது தான் எழுதுகிறேன் :))). இதுவரை வந்து வாசித்து, ஸ்டார க்ளிக்கி, கருத்து சொல்லி, பல(வித)மாய் ஊக்குவித்த நல் உள்ளங்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!











