மின்னல் கவிதைகள்: 1 - கழுத்துக் கறுப்பேறி

Photo: static.panoramio.com
கழுத்துக் கறுப்பேறி
மங்கின தங்க நகை,
வளைந்து காதிலாடும்
நெளிந்த பொன் தோடு.
பாலில் விழும் வண்டோ ?
படபடக்கும் கருவிழிகள்,
வேல் கொண்டோ ? தேய்த்த
பளிச்சிடும் வெண்பற்கள்.
சேதி ஒன்று சொல்வேன்
சிணுங்காமல் கேட்பாயா ?
வெண்கலக் குரலெடுத்து
வீண்வம்பு செய்யாது,
தேளெனக் கொட்டாமல்
தேன்போல் இனித்திடடி.
கன்றுகள் துள்ளியாடும்
காடு களனி நமக்கிருக்க,
உன்னையும் காத்திடுவேன்
உன் இதயம் தருவாயா ?
மாராப்பு ரவிக்கைக்குள்ளே
மச்சான வச்சிக்கடி,
மதிமயங்கிக் கிறங்கையிலே
மொத்தமா வளைச்சுக்கடி !!!
